சாருகேசி - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

13 Jun, 2026 | 05:49 PM
image

தயாரிப்பு : அருண் விசுவல்ஸ் & மெட்ராஸ் சினி புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் :  வை. ஜி. மகேந்திரா, சுகாசினி மணிரத்னம், ராஜ் அய்யப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, 'தலைவாசல்' விஜய், மதுவந்தி மற்றும் பலர்.

இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா

மதிப்பீடு : 2 / 5

இந்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளை ‌வென்ற பாரம்பரிய கர்நாடக இசைகலைஞர் ஒருவரின் வாழ்வியல் பின்னணியில் தயாரான.கர்நாடக இசையில் முதன்மையாக திகழும் 72 மேளகர்த்தா ராகங்களில் 26 ஆவது ராகத்தின் பெயரான 'சாருகேசி' எனும் பெயரில் வெளியாகி இருக்கும் இந்தத் திரைப்படம் - அந்த ராகத்தின் சுவையை -இனிமையை- வழங்கியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கர்நாடக இசை உலகில் வாய்ப்பாட்டுக் கலைஞராக தனித்துவமான குரல் வளத்துடன் மேடை இசை கச்சேரிகளை நடத்தி வருபவர் சாருகேசி( வை. ஜி. மகேந்திரா) . இவருக்கு பாக்கியம் ( சுகாசினி மணிரத்னம்) என்ற மனைவியும், சஞ்சய் ( ராஜ் அய்யப்பா) என்கிற பிள்ளையும், செந்தில் ( 'தலைவாசல்' விஜய்) என்ற உதவியாளரும் உள்ளனர். சாருகேசிக்கும், சஞ்சய்க்கும் ஏழாம் பொருத்தம். தந்தையின் பெயர்- புகழ் - செல்வாக்கு-  ஆகிய அனைத்தும் தன் திறமைகளை மழுங்கடிக்கின்றன என்றும். எல்லா இடத்திலும் சாருகேசியின் வாரிசு என்ற அடையாளத்தையும் விரும்பாத சஞ்சய்.. மேலத்தேய இசையில் சுயாதீன இசை அல்பத்தை உருவாக்கி வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறார். அதற்கான குரல் தேர்வில் ஈடுபடும் போது அவர் கௌதமி ( ரம்யா பாண்டியன்) எனும் இளம் பெண்ணை சந்திக்கிறார். அந்தப் பெண்ணின் குரலும், தோற்றமும் சஞ்சய்க்கு பிடித்ததால்.. காதலிக்க தொடங்குகிறார்.

இருவரும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் அதிருப்தி அடையும் சாருகேசி தம்பதிக்கு, கௌதமி சில விடயங்களை கூறி அதிர்ச்சி தருகிறார்.  இதனால் மனதளவில் பாதிக்கப்படும் சாருகேசி மன நிம்மதியைத் தேடி கடற்கரைக்கு வருகிறார். அங்கு இவரால் ராகதேவன்( சத்யராஜ் ) என குறிக்கப்படும் இறை சக்தி மிக்க ஒருவர் தோன்றி.. இவருக்கு ஆறுதலையும், வழிகாட்டுதலையும் வழங்குகிறார். இந்தத் தருணத்தில் சாருகேசிக்கு அல்சைமர் எனும் நினைவுத்திறன் இழப்பு பாதிப்பு ஏற்படுகிறது.  இதனால் அவ பெயருடன் இசையுலகில் இருந்து கட்டாயமாக விலகுகிறார்.  அதன் பிறகு சாருகேசி சாதனை படைக்கிறார். அது எப்படி? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

கர்நாடக இசை பின்னணியிலான கதை என்றாலும் முழுவதுமாக கர்நாடக இசை என்றல்லாமல் மேலத்தேய இசையையும் ஒலிக்க விட்டு. கதையை நகர்த்தி இருப்பது புத்திசாலித்தனம். சஞ்சயின் பின்னணி குறித்து பார்வையாளர்களுக்கு பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுவது எரிச்சலை தருகிறது.

பாக்கியம் கதாபாத்திர வடிவமைப்பு அக்மார்க் சினிமா தனமாக இருக்கிறது. அதில் சுகாசினியும் எந்த மெனக்கடலையும் செய்யவில்லை. அவருடைய நடிப்பு முழுவதும் படு செயற்கை.

சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா முதல் பாதியில் நன்றாக நடித்து ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினாலும்.பின்பாதியில் டம்மியாகி அவரும் கும்பலில் கும்மி அடிக்கிறார். 

செந்தில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தலைவாசல் விஜய்க்கு தேவையற்ற அணுக்கமான முகக் காட்சிகளை வைத்து ரசிகர்களை பயமுறுத்துகிறார்கள்.

கௌதமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் முகத்தில் இளமையை தொலைத்ததுடன் நடிப்பிலும் 'ஸ்டீரியோ டைப்'பை பின்பற்றுவதால். இவரது திரை தோற்றமும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மென்மையான நாவலாக வாசிக்கப்பட வேண்டிய இந்தக் கதையை.. எந்தவித பிரத்யேக அடையாளம் இல்லாமல் திரை மொழிக்கு மாற்றி இருப்பது பலவீனம்.

ரசிகர்களுக்கு சிறிதளவு ஆர்வத்தை ஏற்படுத்துவது ராகதேவனுடனான காட்சிகள். இதில் சத்யராஜின் தோற்றமும்.. அவரது உரையாடலும் ஒரு பிரிவு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

கர்நாடக இசை பின்னணியிலான கதை என்பதால் படத்தில் பாடல்களுக்கும் இசைக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும் என்ற ரசிகர்களின் இயல்பான எதிர்பார்ப்பும் புஸ்ஸாகிறது.  தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை 'உல்டா - ரீமிக்ஸ் - கொப்பி- செய்து பாடல் இடம் பிடித்திருப்பது!? ஆனால் இவற்றையெல்லாம்வற்றையும் சாருகேசி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுபவமுள்ள நடிகரான வை. ஜி. மகேந்திரன் மறக்கடிக்க செய்கிறார்.

திரைப்பட இயக்குநராக திரையில் தோன்றும் சமுத்திரகனியின் பங்களிப்பு அப்பட்டமான மேடைப் பிரச்சார பாணி. அவருக்கான கமெரா கோணங்களும் அரத பழசு.  சாருகேசியின் சுய சரிதையை திரைப்படமாக உருவாக்கும் அவருடைய பயணத்தில்.. கிடைத்த தகவல்களை திரை மொழியாக பகிர்ந்து கொண்டாலும்.. அதில் சுவாரசியம் மிஸ்ஸிங்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.

சாருகேசி - ஸ்ருதியில் சேராத துக்கடா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06
news-image

ஜீ வி பிரகாஷ் குமாருக்கு பாடகர்...

2026-07-20 14:18:49
news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50