நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட 'அங்கீகாரம்' படக் குழு

Published By: Digital Desk 2

13 Jun, 2026 | 05:49 PM
image

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள 'அங்கீகாரம்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெற்றி விழா ஆந்தம்'எனும் பாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அங்கீகாரம்' திரைப்படத்தில் கே ஜே ஆர், விஜி வெங்கடேஷ், சிந்துரி, ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.

விளையாட்டு வீரரின் வாழ்வியலை தழுவி கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெற்றி விழா ஆந்தம்' எனும் விளையாட்டு மைதானத்தில் வெற்றி பெறும் வீரர்களுக்கான கொண்டாட்ட பாடல் - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் தமிழ் கொடி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்

. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ரீல்ஸ், ஷார்ட்ஸ் , மீம்ஸ் ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியாகி டிஜிட்டல் தள பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருவதால்.... அவர்களது வரவேற்பை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த பாடல்-  அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06
news-image

ஜீ வி பிரகாஷ் குமாருக்கு பாடகர்...

2026-07-20 14:18:49
news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50