'அருவி' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மதன், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் , 'அயலி' இணைய தொடர் மூலம் புகழ்பெற்ற அபி நட்சத்திரா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் தோன்றும் 'சூட்கேஸ்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூட்கேஸ்' திரைப்படத்தில் 'அருவி' மதன், புகழ் , அபிநட்சத்திரா, அஜ்மல் கான், காயத்ரி , ஜோஸ்னா, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்திருக்கிறார். ஹாரர் கொமடி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பழையனூர் சந்தானம் பட கம்பனி மற்றும் ஆர்னா ட்ரீம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரி ராஜன் தயாரித்திருக்கிறார்.
விரைவில் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ஹாரர் - எக்சன் - கொமடி - என கொமர்சல் அம்சங்களுடன் இருப்பதால் ரசிகர்களிடம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM