'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் விமர்சன ரீதியான மற்றும் வணிக ரீதியான பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் திரைப்படம்- கிராமிய பின்னணியில் தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவு சார்ந்த படைப்பாக தயாராகிறது என படக் குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக ஜீவா நடிக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கள பின்னணியாக கொண்டு இப்படம் தயாராகிறது.
இதில் அப்பா மற்றும் மகன் ஆகியோருக்கு இடையேயான உணர்வு - பாச பிணைப்பு - ஆகியவற்றை தழுவி திரைக்கதை எழுதப்பட்டுள்ளது '' என்றார்
'கருடன்', 'மாமன்' என அடுத்தடுத்து வசூல் ரீதியான ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம்- ஜீவா - இயக்குநர் ரா. வெங்கட்- ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் - ஆகியோரது கூட்டணியில் உருவாவதால் இப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM