வள்ளுவன் - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

13 Jun, 2026 | 05:12 PM
image

தயாரிப்பு : ஆறுபடை புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, சாய் தீனா,  பிரேம்குமார் , மீசை ராஜேந்திரன்,  கராத்தே ராஜா மற்றும் பலர்.

இயக்கம் : சங்கர் சாரதி

மதிப்பீடு : 2/ 5

போதுமான பொருட்செலவில் தயாரான 'வள்ளுவன்' திரைப்படம்-  ரசிகர்களுக்கு வள்ளுவர் இயற்றிய திருக்குறள் அளவிற்கு குறைவான அளவிலேனும் நிறைவை அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கதையின் நாயகனான வெற்றி ( சேத்தன் சீனு) தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி உணவை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய பாடசாலையில் உடன் பயின்ற தோழியான சிவான்யா( ஆஷ்னா ஜாவேரி) வின் அறிமுகம் கிடைக்கிறது.

ஆதரவற்ற முதியோர்களுக்கு சிவான்யா செய்து வரும் களப் பணி வெற்றியை கவர்ந்து விட, அவர் செய்து வரும் சமூக சேவைக்கு தன்னாலான பங்களிப்பை வழங்குகிறார். தனக்கு உதவி செய்வது யார் என அறிந்து கொள்வதில் சிவான்யா ஆர்வம் காட்டுகிறார். அதன் பிறகு அவர் தன்னுடன் பாடசாலையில் பயின்ற ஸ்ரீ என தெரிந்து கொள்கிறார்.

இந்த தருணத்தில் சக்ரபாணி( ராம்ஸ் ) என்ற அரசியல்வாதியும், காவல்துறை அதிகாரி ( ராஜ் சிம்மன்) ஒருவரும் சட்டத்தரணி ( கராத்தே ராஜா) ஒருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இது தொடர்பான புலன் விசாரணையை உயர் காவல்துறை அதிகாரியான பிரேம்குமார் தொடங்குகிறார்.

அவரது விசாரணையில் உண்மையான குற்றவாளி யார் என கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

தன் தங்கையை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளியை  அந்தப் பெண்ணின் அண்ணனான வெற்றி காவல்துறையில் புகார் அளித்தும் ஆதாரங்களை வழங்கியும்  குற்றவாளியை சட்டம் தண்டிக்காததால் அதற்கு துணை போனவர்களையும்  குற்றவாளியையும் ஆதாரம் ஏதும் இல்லாமல் சட்ட விரோதமாக பழி வாங்குகிறார். அருமையான கதையாக இருந்தாலும்  அதனை அழுத்தமில்லாத மற்றும் சுவராசியமான திருப்பங்கள் ஏதுமில்லாத திரைக்கதையால் இயக்குநர் ரசிகர்களை படுபயங்கரமாக சோதிக்கிறார்.

படத்தின் ஓபனிங் சாங் - தேவையில்லாத ஆணி.

முதல் பாதியில் திரைக்கதை வேகம் எடுத்தாலும்.. பத்தே நிமிடங்களில் சோதிக்கத் தொடங்குகிறது. அது இடைவேளைக்குப் பிறகும் நீள்வது தான் சோகம். உச்சகட்ட காட்சியில் ரசிகர்களுக்கு பரவாயில்லை என்ற உணர்வு கிடைத்தாலும் அதீத உரையாடல்கள் மூலம் அதையும் காலி செய்கிறார்கள் படக்குழு.

வெற்றியாக நடித்திருக்கும் சேத்தன் சீனு எக்சன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

சிவான்யா கதாபாத்திரத்தில் ஆன்மீக சொற்பொழிவாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் நடித்திருக்கும் ஆஷ்னா காவேரியின் லேட்டஸ்ட் ரீ என்ட்ரி நன்றாக இருக்கட்டும்.

ஒரு ரூபா குமாராக நடித்திருக்கும் நடிகர் சாய் தீனா ரசிகர்களுக்கு  இன்ப அதிர்ச்சியை வழங்குகிறார்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் இயக்குநர் கேட்டதையும்  சொன்னதையும் செய்து அவரை ( மட்டும்) திருப்திப்படுத்தி இருக்கிறது.

மறைந்த குணச்சித்திர நடிகர் மனோ பாலாவின் திரை தோற்றத்தை ரசித்தாலும் அவருக்கான பின்னணி குரல்...!??

சமூகத்தில் நாளாந்தம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விரைவாகவும் உறுதியாகவும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கும் படைப்புதான் வள்ளுவன்.  உலக பொதுமறையாம் திருக்குறளில் இடம்பெற்ற ஒரு திருக்குறளை முன்வைத்து இந்த வள்ளுவனை உருவாக்கியிருந்தாலும்  ரசிகர்களை வசப்படுத்தவில்லை.

வள்ளுவன் - கிள்ளுபவன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51