இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றல் !

13 Jun, 2026 | 01:50 PM
image

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  40 இலட்சம்  ரூபாய் பெறுமதியான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  இந்திய கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தல் பொருட்கள் கடத்த இருப்பதாக இராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (12) இந்த வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அப்போது அரியமான்  கடற்கரை அருகே இருந்த தோப்பு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  பெட்டிகளை பொலிஸார் சோதனையிட்டனர். 

அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 8 பெட்டிகளில் சுமார்  இந்திய மதிப்பில்   ரூ.40 இலட்சம் மதிப்பிலான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் கைப்பற்றிய இந்திய கியூ பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இந்திய க்யூ பிரிவு பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08