கனடா - பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

13 Jun, 2026 | 10:49 AM
image

(நெவில் அன்தனி)

கூட்டு வரவேற்பு நாடான கனடாவுக்கு எதிராக டொரன்டோ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பி குழுவுக்கான பீபா உலகக் கிண்ணப் போட்டியை 1 - 1 என்ற கோல்கள் கணக்கில் பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இப் போட்டி முடிவை அடுத்து இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன.

ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் ஜோவோ லூக்கிக் கோல் போட்டு பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினாவை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து வரவேற்பு நாடான கனடா தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

போட்டியின் 77ஆவது நிமிடம் வரை பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா முன்னிலையில் இருந்தது.

போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கய்ல் லெரின் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தி கனடா அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாமல் போக போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54