நாட்டின் இருவேறு பகுதிகளில் விபத்துகள்: இருவர் பலி; சிறுவன் காயம்!

Published By: Digital Desk 1

13 Jun, 2026 | 09:54 AM
image

நாட்டின் இருவேறு பகுதிகளில், நேற்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வாரியப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கருகில் பஸ் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

05 வயது சிறுவனை கைகளில் ஏந்தியவாறு பாதசாரி ஒருவர் வீதியைக் கடக்க முயன்ற போதே, புத்தளம் நோக்கி பயணித்த பஸ் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாதசாரி உயிரிழந்துள்ளார். அத்துடன் காயமடைந்த சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியின் கஜவத்த பகுதியில், இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் லொரியின் உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொரி ஒன்று, வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொரியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் லொரியின் உதவியாளர் பலத்த காயமடைந்து வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கெட்டியமுல்ல, அலவத்துர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08