(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எல் நினோ தீவிரமடைந்து, பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலை 2.3 செல்சியஸ் அளவு உயர்கின்றது. 1997–1998, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலைகளுக்கு இணையான "சூப்பர் எல் நினோ" ஒன்று நமது நாட்டை பாதிக்கும் என்பதற்கு 63 வீத சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சர்வதேச நிறுவனங்கள் தரவுகளையும், முன்னெச்சரிக்கைகளையும் விடுத்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளி்க்கிழமை (12) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நமது நாட்டில் நிலவும் பெரும் பொருளாதார ஆபத்துக்கு மேலும் ஒரு ஆபத்தான நிலையொன்று வந்து சேருகிறது. ஜனாதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் எல் நினோ நிலை பற்றி தற்சமயம் பரவலாக பேசி வருகின்றனர். பேராசிரியர் அபேவிக்ரமவுடன் நான் இணை தலைமை வகிக்கும் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் எல் நினோ மற்றும் லா நினா நிலை குறித்து முழுமையான விளக்கங்களை இதற்கு முன்னமே நாம் தெரிவித்து வந்தோம்.
எல் நினோ தீவிரமடைந்து, பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலை 2.3 செல்சியஸ் அளவு உயர்கின்றது. 1997–1998, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலைகளுக்கு இணையான "சூப்பர் எல் நினோ" ஒன்று நமது நாட்டை பாதிக்கும் என்பதற்கு 63வீத சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சர்வதேச நிறுவனங்கள் தரவுகளையும், முன்னெச்சரிக்கைகளையும் விடுத்துள்ளன பருவமழை குறைவு, விவசாயத்திற்கு சேதம், வெப்ப அழுத்தம், மழைப்பெருக்கு உள்ளிட்ட பல பாலதூரமான பிரச்சினைகளை நாடு எதிர்கொள்ள நேரிடும். இது இரண்டு கட்டங்களில் நடைபெறும். ஜூலை–ஆகஸ்ட் மாதங்களிலும் இவ்வாண்டின் இறுதியிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டு, கால சந்தர்ப்பமற்ற வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
ஆகவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்வுகள் நடந்த பின் நிவாரணம் வழங்குவதை விட முன்கூட்டியே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுப்பதும், அதற்குத் தயாராவதும் முக்கியம் இதன் காரணமாக வாழ்வாதாரத்திற்கு பலத்த பாதிப்புகள் ஏற்படுவது, மின்சாரக் கட்டமைப்பு முடங்குவது, பயிர்ச் சேதங்கள், உணவுப் பாதுகாப்பின்மை, நீர்மின் உற்பத்தி போன்றவற்றுக்கு சிக்கல்கள் ஏற்படுவதுடன், புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் போது முன்னுரிமை அளிப்பதாகக் கூறினாலும், இப்போது அதற்கான கட்டணங்களைச் செலுத்த தயங்குகின்றது.
அரசாங்கம் அனல் மின் நிலையங்களுக்கு மாத்திரம் விரைவாக கட்டணங்களை செலுத்துவதாகவும், இதன் காரணமாக நகர்ப்புற மக்கள் வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாவதுடன், உணவு விலைகள் அதிகரிப்பதைப் போன்றே கிராமப்புற சமூகத்தினரின் உணவு விலைகளும் அதிகரிப்பது, நீர் வளப் பற்றாக்குறை ஏற்படுவது, வெப்பநிலை உயர்வதால் பவளப்பாறைகள் அழிவடைவது, கடல்சார் சரணாலயங்கள் சேதங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக கடலோர மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
இது பற்றிக் கூறும்போது அரசாங்கத்தின் சேறு பூசும் படைகளினால் அவதூறுகளும் கேலிகளும் செய்யப்படலாம். எதிர்க்கட்சி ஆக்க பூர்வமான பதில்களையும் தீர்வு முன்மொழிவுகளையும் முன்வைக்கும் போது கேலியும் அவதூறும் செய்தவர்கள் ஓரளவுக்கு மேல் இருந்தார்கள். இப்பொழுதும் கூட அவதூறு செய்பவர்கள் இருந்தாலும் இந்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவது நாட்டின் பொதுமக்களாகும், அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு கேலி கிண்டல்களைச் செய்தாலும், இப்பொழுதாவது இவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மெக்ரோ மற்றும் நுண் பொருளாதாரத்தின் அனைத்துத் தரவுகளையும் பார்க்கும் போது மாற்று விகிதம், பொருளாதார வளர்ச்சி வேகம், வேலையின்மை, வெளிநாட்டு இருப்புக்களின் அளவு, 2027 மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் முடிவடைவதோடு 2028 இல் அதிகளவிலான டொலர் தொகையைக் கடனாக செலுத்த வேண்டிய நிலை போன்ற விடயங்கள் குறித்து ஆய்வு செய்யும் போது கடுமையான உறுதியற்ற தன்மை உருவாகியுள்ளது., மத்திய வங்கி ஆளுநர் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் போது தரவு மையமாக இந்த ஆபத்து குறித்துக் கேள்வி எழுப்பிய வேளையில், மக்களுக்கு சுமை ஏற்றாத மேலும் தளர்த்தப்பட்ட புதிய நாணய நிதிய ஒப்பந்தத்திற்குச் செல்ல வேண்டுமா என்பது குறித்துக் கேள்வி எழுப்பிய போது மத்திய வங்கி ஆளுநர் கூட தெளிவற்ற பதிலையே வழங்கினார் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM