மின்னல் தாக்கத்தால் கட்டுநாயக்கிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீண்டும் தரையிறக்கம்

Published By: Vishnu

12 Jun, 2026 | 08:16 PM
image

(செ.கவிஷனா)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை (12) அதிகாலை 1 மணியளவில் 217 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்களுடன் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு எல் – 606 என்ற ஏர்பஸ் எ330 ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக திருப்பி அனுப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு அருகில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த விமானத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அதிகாலை 1.40 மணியளவில் விமானத்தை மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பின்னர் மற்றொரு மாற்று விமானம் மூலம் வெள்ளிக்கிழமை (12) காலை 6.06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்ரேலியா சிட்னி நகருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த எதிர்பாராத சம்பவத்தின் காரணமாக விமானப் பயணம் சுமார் 5 மணித்தியாலங்களும் மேலாக தாமதமடைந்துள்ளது.

மின்னல் தாக்குதலுக்குள்ளான விமானம் மேலதிக பரிசோதனைகள் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொறியியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் திறன்...

2026-07-20 15:32:21
news-image

கல்முனை பொதுச் சந்தை மேம்பாடு குறித்து...

2026-07-20 15:14:50
news-image

வேலணை நூடுல்ஸ் உற்பத்தி நிலையத்தை நேரில்...

2026-07-20 14:52:21
news-image

வடக்கு சுற்றுலாத்தலங்களின் பொதுச் சுகாதார வசதிகளை...

2026-07-20 14:27:01
news-image

ஹபராதுவ பகுதியில் பெருமளவு போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்...

2026-07-20 14:07:32
news-image

விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில்...

2026-07-20 14:00:34
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின்...

2026-07-20 13:54:14
news-image

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அகற்றப்படும் சட்டவிரோத...

2026-07-20 13:32:16
news-image

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை...

2026-07-20 13:12:15
news-image

குரஞ்சாந்தீவு உப்பளத்தை மீண்டும் இயக்க துரித...

2026-07-20 13:08:05
news-image

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத்...

2026-07-20 13:02:47
news-image

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள்,...

2026-07-20 12:50:20