ஆசியா  றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப் 2026: உரிய நேரத்தில் இலங்கைக்கு விசா கிடைக்காததால் கடைசி ஆட்டம் இரத்து

Published By: Vishnu

12 Jun, 2026 | 08:05 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் நாம்டொங் ஆசியாட் றக்பி விளையாட்டரங்கில் ஜூன் 13ஆம் திகதி சனிக்கிழமை  விளையாடப்படவிருந்த ஆசியா றக்பி எமிரேட்ஸ் ஆடவர் றக்பி சம்பியன்ஷிப் போட்டி இரத்துச் செய்யப்பட்டதென ஆசியா றக்பி நிறுவனம் கவலையுடன் அறிவித்துள்ளது.

போட்டிக்காக கொரியாவுக்குள் உரிய நேரத்தில் நுழைவதற்குத் தேவையான பயண விசாக்களை இலங்கை தேசிய அணியால் பெற முடியவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இப் போட்டியை நடத்துவதற்காக இலங்கை றக்பி, கொரியா   றக்பி யூனியன் ஆகியவற்றுடன் ஆசியா  றக்பி பல தடவைகள் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு முயற்சித்தது. எவ்வாறாயினும், சகல தரப்பினரும் கூட்டாக முயற்சிகளில் ஈடுபட்டபோதிலும் குறிப்பிட்ட நேரகாலத்திற்குள் விசா நடைமுறைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

சர்வதேச றக்பி அட்டவணை, போக்குவரத்து தேவைப்பாடுகள், மைதான வசதி, அணிகளின் பொறுப்புகள் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்த பின்னர், 2026 போட்டி சுழற்சியில் இந்தப் போட்டியை மீள் அட்டவணைப்படுத்துவதற்கு   பொருத்தமான காலம் இல்லை என ஆசியா   றக்பி நிறுவனம்  தீர்மானித்தது.

ஆசியா  றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப் 2026இல், இரண்டு மிக உயரிய போட்டிகள் நடைபெற்றன. கொழும்பில் நடைபெற்ற இலங்கையுடனான போட்டியில் 15 - 14 என ஹொங்கொங் சைனா வெற்றிபெற்றது. ஹொங்கொங் கால்பந்தாட்டக் கழக மைதானத்தில் நடைபெற்ற தென் கொரியாவுடனான போட்டியில் 45 - 9 என ஹொங்கொங் சைனா வெற்றிபெற்றது.

இந்தப் போட்டி முடிவுகளுக்கு அமைய ஆசியா றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப்பில் ஏழாவது தடவையாக ஹொங்கொங் சைனா சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது.

போட்டி விதிகளுக்கு அமைய தென் கொரியாவுக்கு 4 புள்ளிகள் வழங்கப்படுவதுடன் அவ்வணிக்கு 20 - 0 என்ற புள்ளிகள் வித்தியாச வெற்றியும் அளிக்கப்படும்.

போட்டியின் உத்தியோகபூர்வ புள்ளிகள் நிலை சரிசெய்யப்பட்டு ஆசியா றக்பி நிறுவனத்தின் இணையத்தளத்தில் பதிவிடப்படும் என ஆசியா றக்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவைப்படும்பட்சத்தில் பொருந்தக்கூடிய போட்டி விதிமுறைகளுக்கு இணங்க, போட்டி தொடர்பான மேலதிக முடிவுகளை ஆசியா றக்பி, தனது உத்தியோகபூர்வ  வழிகள் மூலம் தெரிவிக்கும். அங்கத்துவ சங்கங்கள், அணிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், ஆசியா றக்பி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் ஆசியா றக்பி நிறுவனத்திடமிருந்து வரும் நேரடித் தொடர்புகளிலேயே தங்கியிருக்க வேண்டும்.

போட்டி முழுவதும் தொடர்ச்சியான ஆதரவையும் புரிதலையும் வழங்கிய அனுசரணையாளர்கள், பங்கேற்கும் சங்கங்கள், போட்டி அதிகாரிகள், ஒளிபரப்பாளர்கள், ஊடகப் பங்காளர்கள், வரவேற்பு நாடுகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆசியா றக்பி நிறுவனம் நன்றி தெரிவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56