ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

12 Jun, 2026 | 05:32 PM
image

(நெவில் அன்தனி)

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி தகுதிகாண் ஓட்டப் போட்டியில் 20 வயதுடைய அமெரிக்க இளைஞன் ஜா'கோபே தாப் உலக சாதனை படைத்து முழு மெய்வல்லுநர் உலகையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஒரிகொன், இயூஜின் அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய கல்லூரிகள் மெய்வல்லுநர் சங்க போட்டியில் ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை ஜா'கோபே தாப் 12.75 செக்கன்களில் நிறைவு செய்து புதிய உலக சாதனை படைத்தார்.

தேசிய கல்லூரிகள் மெய்வல்லுநர் சங்க போட்டியில் கடந்த 50 வருடங்களில் உலக சாதனை படைத்த முதலாவது மெய்வல்லுநர் ஜா'கோபே தாப் ஆவார்.

இதற்கு முன்னர் அவரது சிறந்த நேரப்பெறுதி 13.01 செக்கன்களாக இருந்தது.

12.80 செக்கன்கள் என்ற முந்தைய சாதனையை ப்ரசல்ஸ் மெய்வல்லுநர் போட்டியில் 2012ஆம் ஆண்டு மற்றொரு அமெரிக்கரான ஏரிஸ் மெரிட் என்பவர் நிலைநாட்டி இருந்தார்.

நடப்பு ஒலிம்பிக் சம்பியன் க்ரான்ட் ஹொலோவே, தேசிய கல்லூரிகளுக்கான சாதனையான 12.98 செக்கன்கள் என்ற சாதயையை 2019இல் ஏற்படுத்தி இருந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெறவுள்ள ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டியில் தாப் பங்குபற்றவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54