தமிழ் திரையுலகில் பண மோசடி தொடர்பான வழக்கை எதிர்கொண்டு வரும் நட்சத்திர நடிகரான விஷால் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'மகுடம் ' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் விஷால் இயக்கத்தில் உருவாகி வரும் 'மகுடம்' திரைப்படத்தில் விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான்விஜய், ஜெயப்பிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், வி ஜே ஜான்சி, பதம் குமார், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் பரபர எக்சன் திரில்லராக இடம் பிடித்திருப்பதால்... அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் ஆதரவை பெற்று வருகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM