இறக்குவானையின் முன்னணி கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ள 'RNL': இன்றுடன் 3 வருடங்கள் நிறைவு!

12 Jun, 2026 | 04:55 PM
image

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பிரதேசத்தில், இளம் கிரிக்கெட் திறமையாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட “இறக்குவானை நியூ லுக்” (Rakwana New Look - RNL) மென்பந்து கிரிக்கெட் அணியானது இன்றுடன் (12 ஜூன்) தனது வெற்றிகரமான 3ஆவது வருடத்தை நிறைவு செய்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி, சில இளைஞர்களின் கூட்டு முயற்சியாக இந்த அணி தோற்றுவிக்கப்பட்டது.

"ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான முதற்படி" என்ற ஊக்கமூட்டும் கோஷத்துடன், தோல்விகளைக் கூட வெற்றிக்கான படியாக மாற்றிக் கொண்டே RNL அணி முன்னேறி வருகிறது. ஆரம்பத்தில் 20 வீரர்களுடன் பயணத்தைத் தொடங்கிய இந்த அணி, இன்று 30 இளம் வீரர்களைக் கொண்ட வலுவானதொரு விளையாட்டுப் பட்டாளமாக மாறியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், RNL அணி பல முக்கிய தொடர்களில் விளையாடி 22 சாம்பியன் பட்டங்களையும், 10 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

மேலும், கடந்த 2025ஆம் ஆண்டில் நடைபெற்ற 25 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை மென்பந்து கிரிக்கெட் தரவரிசைப் புள்ளிகள் அடிப்படையிலான போட்டியில், நாடு தழுவிய ரீதியில் 5ஆம் இடத்தைப் பெற்று இறக்குவானை பிரதேசத்திற்குப் பெருமை சேர்த்திருந்தது.

இதேவேளை, இந்த அணியின் திறமையான பந்துவீச்சாளரான தனுஷன், இரத்தினபுரியில் நடைபெற்ற கடினப்பந்து தெரிவுப் போட்டியொன்றில் மணிக்கு 129 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசி அசத்தியிருந்தார். இந்த அசாத்திய வேகத்தின் மூலம் அவர் அத்தொடரில் 2ஆம் இடத்தைப் பெற்று, குறித்த அணிக்கு கௌரவத்தைத் தேடித்தந்தார்.

RNL அணியின் ஒவ்வொரு வீரரும் தங்கள் தனித்துவமான திறமையாலும், தளராத உறுதியாலும், சிறந்த விளையாட்டு ஒழுக்கத்தாலும் விளையாட்டு உலகில் மிளிர்ந்து வருகின்றனர். இளம் வீரர்களின் கனவுகளையும், எதிர்கால கிரிக்கெட் நம்பிக்கையையும் தாங்கி நிற்கும் ஒரு முன்மாதிரி அணியாக “இறக்குவானை நியூ லுக்”  இன்று உருவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54