பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து

12 Jun, 2026 | 04:53 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அரங்கேற்றப்படும் பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை இரவு (11.00 மணி) நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகிறது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான ரி20 கிரிக்கெட் வரலாற்றை நோக்குவேமாயானால் இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.

இங்கிலாந்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண மகளிர் ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து இந்த இரண்டு அணிகளும் 2023ஆம் ஆண்டுவரை விளையாடியுள்ள 12 ரி20 போட்டிகளில் இங்கிலாந்து 10 - 2 என்ற ஆட்டங்கள் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் இங்கிலாந்தில் கடைசியாக 2003ஆம் ஆண்டு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட மகளிர் ரி20 தொடரில் 2 - 1 என்ற ஆட்ட் கணக்கில் இலங்கை வெற்றிபெற்றது.

இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொண்டதால் இந்த உலகக் கிண்ணத்தை இலங்கை மிகுந்த நம்பிக்கையுடன் எதர்கொள்ளும் என்பது நிச்சயம்.

ஆனால், மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் இங்கிலர்தில் விளையாடவுள்ள இலங்கை அணியினர் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டி தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து,

'நாங்கள் அச்சமின்றி விளையாடவேண்டும். நாளைய (இன்று) போட்டியில் நாங்கள் திறமையை வெளிப்படுத்தினால் எங்களால் வரலாறு படைக்க முடியும்' என்றார்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து சகல அத்தியாயங்களிலும் விளையாடியுள்ள சமரி அத்தப்பத்து இம்முறை பத்தாவது அத்தியாயத்தில் கால் பதிக்கிறார்.

தொடர்ந்து பேசிய சமரி அத்தபத்து,

'இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்தது. ஆனால், நாங்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதால் பலவீனர்கள் என்ற குறிச்சொல்லுடன் இந்தப் போட்டியை எதிர்கொள்கிறோம். அதேவேளை, இங்கிலாந்துக்கு சிறு அழுத்தம் இருக்கும் என்பதை நான் அறிவேன். ஏனேனில் அவர்கள் தங்களது சொந்த மண்ணில் மிகுந்த எதிர்பார்ப்புடன் முதலாவது போட்டியை எதிர்கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பெருமளவிலான இங்கிலாந்து இரசிகர்கள் இந்தப் போட்டியைக் கண்டுகளிக்க வருகை தருவார்கள். எனவே அவர்களுக்கு ஒருவகை அழுத்தும் இருப்பதாக நான் உணர்கிறேன். எங்களுக்கு அத்தகைய அழுத்தும் இலலை' என்றார் அவர்.

பாகிஸ்தானுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இரண்டு உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை மகளிர் அணி மிகுந்த உற்சாகத்துடன் இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இன்றைய போட்டியில் விளையாடவுள்ள பதினொருவரை இலங்கை அணி முகாமைத்துவம்  வெளியிட்டுள்ளது. ஆனால், அனுபவசாலியான ஹசினி பெரேராவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தை இலங்கை அணி முகாமைத்துவம் வெளியிடவில்லை.

துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் 8 துடுப்பாட்ட வீராங்கனைகள் இறுதி அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். இரண்டு வேகபந்துவீச்சாளர்களும் ஒரு சுழல்பந்துவீச்சாளரும் இடம்பெறுகின்றனர்.

அவர்களுடன் சமரி அத்தபத்து, கவிஷா டில்ஹாரி ஆகியோர் பந்துவீச்சில் ஈடுபடுவர். தேவைப்படின் நிலக்ஷிகா சில்வா பந்துவீச்சில் ஈடுபடுத்தப்படுவார் என அறியக்கிடைக்கிறது.

விளையாடவுள்ள பதினொருவர்

இலங்கை அணியில் விஷ்மி குணரட்ன, சமரி அத்தபத்து (தலைவி), இமேஷா துலானி, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹன்சிமா கருணாரட்ன, கவீஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, கௌஷினி நுதியங்கனா, சுகந்திகா திசாநாயக்க, மல்கி மதாரா, மிதாலி அயோத்யா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, பலம்வாய்ந்த அவுஸ்திரேலியாவிடம் பயிற்சிப் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து, இரண்டாவது போட்டியில் மற்றொரு பலம் வாய்ந்த அணியான இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் சாதிக்க தயார் என்ற சமிக்ஞையை கொடுத்துள்ளது.

எவ்வாறாயினும் இங்கிலாந்து தனது இறுதி பதினொருவரை இன்னும் தெரிவு செய்யவில்லை.

'எமது குழாத்தில் 15 வீராங்கனைகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் விளையாடக்கூடியவர்களே. இறுதி பதினொருவரைத் தெரிவுசெய்வது கடினமானது. சிலருக்கு ஏமாற்றம் கிடைக்கலாம். ஏனேனில் இந்த கோடைக்காலத்தில் அனைவரும் தங்களாலான அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி இருந்தனர். நாணய சுழற்சியின்போது எமது அணியில் இடம்பெறும் 11 வீராங்கனைகளை வெளியிடுவோம்' என்றார்.

இங்கிலாந்து குழாம்

சொஃபி டன்கலி, அமி ஜோன்ஸ், ஹீதர் நைட், டெனி வியட்-ஹொஜ், நெட் சவர்-ப்றன்ட் (தலைவி), சார்ளி டீன் (உப தலைவி), அலிஸ் கெப்சி, டெனி கிப்சன், ஃப்ரியா கெம்ப், லோரென் பெல், டில்லி கூர்ட்டீன்-கோல்மன், சொஃபி எக்லஸ்டோன், லோரென் ஃபைலர், லின்சி ஸ்மித், இஸி வொங்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56