சுகாதார, ஊடக அமைச்சின் புதிய கட்டிடத்துக்கு பொதுத் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

12 Jun, 2026 | 04:16 PM
image

(செ.சுபதர்ஷனி)

கொழும்பு-8, டட்லி சேனாநாயக்க மாவத்தையில் (காசல் வீதி) அமைந்துள்ள சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கு சொந்தமான புதிய கட்டிடத்தில் உள்ள பிரிவுகளைத் தொடர்புகொள்வதற்காக 011-2112700 என்ற புதிய பொதுத் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வசதிக்காக இந்த இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 'சுவசிரிபாய' வளாகத்திலிருந்து புதிய கட்டிடத்திற்கு 37 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளதுடன், 'மெடி ஹவுஸ்' கட்டிடத்திலிருந்து 14 பிரிவுகள் சுவசிரிபாய கட்டிடத்துக்கு  மாற்றப்பட்டுள்ளன.

புதிய கட்டிடத்தின் தரைமாடியில் தபால், விநியோகம், பராமரிப்பு மற்றும் உள்வாரி கணக்காய்வு  பிரிவுகளும், ஏனைய மாடிகளில் பொது சுகாதார சேவைகள், நிர்வாகம், ஓய்வூதியம், போக்குவரத்து மற்றும் பல் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளும் இயங்குகின்றன. 

அதேநேரம், 'மெடி ஹவுஸ்' கட்டிடத்திலிருந்து சுவசிரிபாயவுக்கு  உள்நாட்டு மருத்துவ அபிவிருத்தி, பொறியியல் சேவை, மனநல பிரிவு, மனிதவள மேலாண்மை மற்றும் தேசிய சிறுநீரக நோய் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 14 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் திறன்...

2026-07-20 15:32:21
news-image

கல்முனை பொதுச் சந்தை மேம்பாடு குறித்து...

2026-07-20 15:14:50
news-image

வேலணை நூடுல்ஸ் உற்பத்தி நிலையத்தை நேரில்...

2026-07-20 14:52:21
news-image

வடக்கு சுற்றுலாத்தலங்களின் பொதுச் சுகாதார வசதிகளை...

2026-07-20 14:27:01
news-image

ஹபராதுவ பகுதியில் பெருமளவு போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்...

2026-07-20 14:07:32
news-image

விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில்...

2026-07-20 14:00:34
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின்...

2026-07-20 13:54:14
news-image

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அகற்றப்படும் சட்டவிரோத...

2026-07-20 13:32:16
news-image

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை...

2026-07-20 13:12:15
news-image

குரஞ்சாந்தீவு உப்பளத்தை மீண்டும் இயக்க துரித...

2026-07-20 13:08:05
news-image

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத்...

2026-07-20 13:02:47
news-image

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள்,...

2026-07-20 12:50:20