ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம் முதல் தடவையாக 12 அணிகள் மோதுகின்றன

12 Jun, 2026 | 03:58 PM
image

(நெவில் அன்தனி)

முழு கிரிக்கெட் உலகினாலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் இன்று ஆரம்பமாகிறது.

ஆறு தடவைகள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா, கடைசி இரண்டு அத்தியாயங்களில் உப சம்பியனான தென் ஆபிரிக்கா, 2020இல் உப சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், உலக தகுதிகாண் சுற்றிலிருந்து தெரிவான பங்களாதேஷ், நெதர்லாந்து ஆகியன குழு 1இல் இடம்பெறுகின்றன.

நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, 2009 சம்பியன் இங்கிலாந்து, 2016 சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, தகுதிகாண் சுற்றிலிருந்து தெரிவான அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியன குழு 2இல்  இடம்பெறுகின்றன.

ஆரம்பத்தில் 8 அணிகளும் பின்னர் 10 அணிகளும் பங்குபற்றிய மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இம்முறை 12 அணிகள் மோதுகின்றமை விசேட அம்சமாகும்.

மகளிர் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் ஐசிசியின் திட்டத்திற்கு அமையவே அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 இந்த இரண்டு குழுக்களிலும் முதல் சுற்றில் தலா 15 போட்டிகள் வீதம் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறும்.

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விiளையாட தகுதிபெறும்.

அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் மகளிர் ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடும். இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை 5ஆம் திகதி  நடைபெறும்.

உலகக் கிண்ணப் போட்டிகள் எஜ்பெஸ்டன், ஹாம்ப்ஷயர் பௌல், ஹெடிங்லே, ஓல்ட் ட்ரஃபர்ட், தி ஓவல், பிறிஸ்டல் கவுன்டி மைதானம், லோர்ட்ஸ் ஆகிய ஏழு விளையாட்டரங்குகளில் நடைபெறும்.

அவுஸ்திரேலியா

ஆறு தடவைகள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா 2017க்குப் பினனர் எந்தவொரு உலகக் கிண்ணத்தையும் வென்றதில்லை. எனவே இம்முறை சொஃபி மொலிநொக்ஸ் தலைமையில் மீண்டும் கிண்ணத்தை சுவீகரிக்க அவுஸ்திரேலியா முயற்சிக்கும். எலிஸ் பெரி, தஹ்லியா மெக்ரா, ஏஷ்லி கார்ட்னர், மெகான் சூட், அலானா கிங், பெத் மூனி பிரதான வீராங்கனைகளாக ஆஸி. அணியில் இடம்பெறுகின்றனர்.

நியூஸிலாந்து

நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, இரண்டு வருடங்களுக்கு முன்னர் சம்பியன் அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீராங்னைகளுடன் களம் இறங்குகிறது. கடந்த உலகக் கிண்ணத்தில் சகலதுறைகளிலும் பிரகாசித்து இறுதி ஆட்டநாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றெடுத்த அமேலியா (மெலி) கேர் தலைமையிலான   நியூஸிலாந்து அணியில்  சுஸி பேட்ஸ், சொஃபி டிவைன், ஜெசி கேர், லீ தஹுஹு, ப்றூக் ஹாலிடே ஆகிய அனுபவசாலிகள்  விளையாடுகின்றனர்.

இங்கிலாந்து

தனது சொந்த மண்ணில் 2009இல் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்தில் சம்பியனான இங்கிலாந்து, 17 வருடங்களின் பின்னர் நெட் சிவர் ப்ரன்ட் தலைமையில் மீண்டும் சம்பியனாவதற்கு முயற்சிக்கவுள்ளது.

இந்தியாவுக்கு எதரான பயிற்சிப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் களம் இறங்கும் இங்கிலாந்து அணியில் அமி ஜோன்ஸ், சொஃபியா டன்க்லி, ஹீதர் நைட், சொபி எக்லஸ்டோன் போன்ற அனுபவசாலிகள் இடம்பெறுகின்றனர்.

இந்தியா

கடைசியாக மகளிர் 50 உலகக் கிண்ணப் போட்டியில் சம்பியனாக இந்தியா, ரி20 உலகக் கிண்ணத்தையும் சுவீகரிக்கும் குறிக்கோளுடன் ஹாமன்ப்ரீத் தலைமையில் களம் இறங்கவுள்ளது.

ஸம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ், ஷபாலி வர்மா, ஹாமன்ப்ரீத் கோர், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா ஆகியோர் தமது அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடவுள்ளனர்.

இலங்கை

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து ஆகிய அணிகளை அவற்றின் சொந்த மண்ணில் வெற்றிகொண்டுள்ள சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி, இம்முறை தலைகீழ் முடிவுகளை ஏற்படுத்தக்கூடிய அணியாக கணிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் நாட்களில் இலங்கை முழு அளவில் பிரகாசித்தால் அவ்வணி அரை இறுதிவரை முன்னேறுவது உறுதி.

மேற்கிந்தியத் தீவுகள்

அண்மைக்காலமாக மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்கத் தவறியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் இம்முறை சாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது.

தென் ஆபிரிக்கா

பொதுவாக அதிர்ஷ்டமற்ற அணி என வருணிக்கப்படும் தென் ஆபிரிக்கா, இம்முறை லோரா வுல்வார்ட் தலைமையில் சாதிக்கும் என நம்பப்படுகிறது.

ஏனைய அணிகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியன சாதிக்கும் என்று கூறுவதற்கில்லை. ஆனால், எதிரணிகளுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடிய திறமை அவ்வணிகளுக்கு இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் இந்த வருட உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டத்திற்கு 7 அணிகளுக்கு இடையில் போட்டி நிலவும் என்பதால் பரபரப்பான போட்டிகளைக் காணக்கூடியதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54