நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாகுவதால் ஏற்படும் சிக்கலுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும் - அஜித் பி பெரேரா

12 Jun, 2026 | 04:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்காத காரணத்தால் மேல் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பதவி உயர்வு தாமதிக்கப்படுகிறது. நியாயமான காரணிகள் இல்லாமல் நீதியரசர்களுக்கான நியமனங்களை வழங்காமல் இருப்பது நீதித்துறைக்கு விடுக்கும் மறைமுக அழுத்தம் என்றே கருத முடிகிறது. உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாகுவதால் ஏற்படும் சிக்கலுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும் என  ஐக்கிய மக்கள்  சக்தியின் களுத்துறை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அஜித் பி பெரேரா  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற  இலங்கை மத்திய வங்கியின்  2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு  அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.அதற்கு நீதித்துறை சிறந்த முறையில் செயற்பட வேண்டும். பிரதம நீதியரசர்,நீதியரசர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கு நிறுவனப்படுத்தப்பட்ட வகையில் நாட்டின் நீதியை செயற்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களின்  நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகிறது.ஆகவே மக்களுக்கான அந்த அதிகாரம்  பற்றி பேசுவதற்கு பாராளுமன்றத்துக்கு முழுமையான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக அளிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 4(அ) பிரிவில் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே  நீதித்துறையின் நியமனங்கள் பற்றி பாராளுமன்றத்தில் பேசக்கூடாது என்று எவரும் குறிப்பிட கூடாது.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதுவரையின் 08 வெற்றிடங்கள் காணப்படுகிறது. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களுக்கான நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளை நியமிப்புச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்  மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதியரசர்களின் நியமனத்தின் போது ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு  பெயர் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.  ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளை பரிசீலனை செய்து அரசியலமைப்பு பேரவை அனுமதியளிக்க வேண்டும்.அதன் பின்னரே ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக நியமனங்களை வழங்க முடியும்.

உயர்நீதிமன்றம் மற்றும்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 06 மாத காலமாக வெற்றிடம் நிலவுவதால்  மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள், ரிட் மனுக்கள் மற்றும் குற்றவியல் மற்றும் இறுதி நியாயாதிக்கம் தொடர்பான வழக்குகளை நிறைவு செய்வதில்  பாரிய சவால்கள் தோற்றம் பெற்றுள்ளன.ஜனாதிபதி இவற்றை அறியாமல் இருக்க முடியாது.

உயர்நீதிமன்றம் மற்றும்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் வெற்றிடம் தொடர்பில் பலமுறை பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளேன். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பிரதம நீதியரசரும்  இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.  காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்காமல் இருப்பது நீதித்துறைக்கு மறைமுகமாக விடுக்கும் அழுத்தமாக கருத முடிகிறது.

 உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்காத காரணத்தால் மேல் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பதவி உயர்வு தாமதிக்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் மற்றும்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் வெற்றிடம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவையின் தலைவரான  சபாநாயகரிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான ஆறு துறைகளின் கீழ்...

2026-07-17 17:38:44
news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20