அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றினூடாக கொண்டு சென்ற போது சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று (11) வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாபிட்டியாவிற்கு ஹட்டன் வழியாக கழிவுத் தேயிலையை ஏற்றிச் செல்லும் போதே ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லொறியின் சாரதி மற்றும் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை, கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி ஆகியவற்றை இன்று (12) வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM