ஹபீபி - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : நேசம் என்டர்டெய்ன்மென்ட் - ஜி.கே.எஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன்ஸ்- ரோமியோ பிக்சர்ஸ்
நடிகர்கள் : கஸ்தூரிராஜா, ஈஸா, மாளவிகா மனோஜ், தனா ஸ்ரீ சுதாகரன், ஜெயஸ்ரீ பினுராஜ், அனு ஸ்ரேயா ராஜன், ரேகா குமணன் மற்றும் பலர்.
இயக்கம் : மீரா கதிரவன்
மதிப்பீடு : 3 / 5
இஸ்லாமியர்களின் வாழ்வியல்- இயக்குநர் மீரா கதிரவனின் பல ஆண்டுகால உழைப்பு - படத்தின் முன்னோட்டம்- ஆகியவை ஏற்படுத்திய எதிர்பார்ப்பு என பல காரணங்களால் 'ஹபீபி ' என எளிதில் பொருள் புரியாத வார்த்தையை தலைப்பாகக் கொண்ட இந்தப் படத்தைக் காண பட மாளிகைக்குள் ரசிகர்கள் சென்றனர். அவர்களுக்கு படத்தின் தலைப்புக்கான பொருள் தெரியாத நிலையே படம் பார்த்த பிறகும் நீடித்ததா..? இல்லையா..? என்பதை தொடர்ந்து காண்போம்.
1980 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தென் பகுதியில் வாழும் இஸ்லாமிய குடும்பத்தின் தலைவர் முஹம்மது யூசுப். (கஸ்தூரி ராஜா) இவருக்கு மனைவி- பிள்ளை - சகோதரர் -சகோதரரின் மனைவி- அவர்களது பிள்ளைகள்- என்று கூட்டு குடும்பமாக வாழ்கிறார் வாழ்வாதாரத்திற்காக கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கும் இவருக்கு வாழ்நாள் முழுவதும் கைத்தறி நெசவுத் தொழிலை நெய்து கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஆனால் அவருடன் ஒன்றிணைந்து வாழும் ஏனைய இளம் குடும்ப உறுப்பினர்களுக்கு 'மாற்றங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்' என நினைக்கிறார்கள். இந்நிலையில் பொருளாதார பற்றாக்குறையின் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் புலம்பெயர்ந்து அயல் தேசத்திற்கு சென்று பொருள் ஈட்டுகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் - குடும்ப உறவு மேலாண்மைவியல் - சமூகவியல்- சிக்கல்களை இஸ்லாமிய மத கலாச்சார பின்னணியில் யதார்த்தத்துடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
இதனிடையே யூசுப்பின் மகன் அபுதாஹிர்( ஈஸா) - அவருடைய பாடசாலை பருவத்தில் இருந்து ஒன்றாக உடன் இருக்கும் நிலோஃபர் ( மாளவிகா மனோஜ்) எனும் பெண் மீது காதல் பிறக்கிறது. இந்த காதல் என்ன ஆனது? என்பதை இஸ்லாமிய மத கலாச்சார பின்னணியில் விவரிப்பதும் இடம் பிடித்துள்ளது.
முதலில் இயக்குநருக்கு கை வலிக்க கரம் குலுக்கி பூங்கொத்து ஒன்றை வழங்கி பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாவில் இதற்கு முன் மத நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்களின் அற நெறி சார்ந்த வாழ்வியல் நடைமுறையை இவ்வளவு விரிவாகவும்.. விசாலமாகவும்... திரைமொழியாகவும்... காட்சிப்படுத்தப்பட்டதில்லை.
படைப்பு சமநிலை என்ற விடயத்திற்காக இயக்குநர் கதையின் நாயகனான யூசுப்பின் தோழராக ஒரு இந்து கதாபாத்திரத்தை வடிவமைத்து.. அவருக்கு உரிய முக்கியத்துவத்தையும் வழங்கி இருக்கிறார்.
முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்வது சோர்வை தந்தாலும் இடைவேளை காட்சியில் ரசிகர்களை வசப்படுத்துகிறார் இயக்குநர்.
இரண்டாம் பாதியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக பர்வீண் ( தனா ஸ்ரீ சுதாகரன்) என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி, உச்சக்கட்ட காட்சி வரை நகர்த்துவதால் திரைக்கதையின் வேகம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. யாருமே எளிதில் யூகிக்காத உச்சகட்ட காட்சி. அங்குதான் இப்படத்தின் டைட்டிலுக்கான பொருள் ரசிகர்களுக்கு புரிகிறது.
1980 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான கதை சம்பவத்திற்கு ஏற்ற வகையில் கலை இயக்கத்தை கவனித்த கலை இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர். இவர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பாராட்டப்பட வேண்டியவர்களே. கதை- கதைக்களம்- சம்பவம் -மாந்தர்கள்- உணர்வுகள்- என ஒவ்வொன்றுக்கும் தங்களுடைய தொழில்நுட்பத்தால் உயிரூட்டி ரசிகர்களுக்கு அசலான நுகர்வு உணர்வினை வழங்கி உள்ளனர்.
யூசுப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கஸ்தூரிராஜா, அபுதாஹிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஈஸா, நிலோஃபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மனோஜ், பர்வீண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனா ஸ்ரீ சுதாகரன், ஷாலியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனு ஸ்ரேயா ராஜன் என ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரத்திற்கு துல்லியமாக பொருந்துவதுடன்... அந்த கதாபாத்திரத்தின் உணர்வை தங்களுடைய நடிப்புத் திறனால் வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கவர்கிறார்கள்.
இஸ்லாமிய மதத்திலும்.. சொசைட்டியில் உள்ளவர்கள்- மதராஸாவில் உணவுடன் கூடிய தூக்குச்சட்டியை தூக்கிச் செல்பவர்கள்.. என்ற பாகுபாடு இருப்பதையும்.. தான் பால்ய பிராயத்திலிருந்து காதலிக்கும் காதலியின் குரலை .. அவள் திருமணமாகி... இரண்டு குழந்தைக்கு அம்மாவாகி... கணவனை விவாகரத்து செய்த பின் ... கேட்பதும்.. கேட்டவுடன் 'உங்களது குரல் நன்றாக இருக்கிறது' என்று நாயகன் சொல்வதும் இயக்குநரின் பிரத்யேக 'லவ் டச்'.
ஹபீபி - குதாஹாஃபிஸ்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM