இன்றைய சூழலில் இளம் தம்பதியினர் தங்களுக்கான வாரிசை உருவாக்கிக் கொள்வதில் பல்வேறு வகையில் திட்டமிடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்தவுடன் குழந்தையை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கிறார்கள்.
ஆனால் அந்தத் தருணத்தில் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் அதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. உடனடியாக குழந்தை பேறுக்காக வைத்தியசாலைக்குச் சென்று செயல்முறை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ள தொடங்குகிறார்கள்.
இதில் இருபது சதவீதத்தினருக்கு தோல்வியே தொடர்கிறது. இந்நிலையில் புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு தம்பதிகள் மேற்கொள்ள வேண்டிய பிரத்யேக வழிமுறை குறித்து எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சிலவற்றை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : குண்டு மஞ்சள், கொண்டைக்கடலை , மண்ணாலான ஐந்து அகல் விளக்கு, பசு நெய், மஞ்சள் வண்ண லட்டு என்கிற இனிப்பு.
ஒரு வியாழக்கிழமையை தெரிவு செய்து, அன்றைய திகதியின் குரு ஹோரை தருணமான காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள்ளாக கொண்டைக்கடலையை சிறிதளவு பரப்பி, அதன் மீது ஒரே ஒரு குண்டு மஞ்சளை வைத்து, அதனை குரு பகவானாக நினைத்து வணங்கிட வேண்டும். அந்தத் தருணத்தில் மண்ணாலான ஐந்து அகல் விளக்கில் பசு நெய்யை ஊற்றி தீபமேற்ற வேண்டும்.
அத்துடன் லட்டு என்கிற இனிப்பை நிவேதனமாக படைத்து, 'புத்திர பாக்கியம் விரைவில் சாத்தியப்பட வேண்டும்' என குரு பகவானை மனதில் தியானித்து பிரார்த்திக்க வேண்டும். தொடர்ந்து 24 வாரங்கள் இதனை கடைப்பிடிக்கும் போது... குரு பகவானின் பரிபூரணமான அருளுடன் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM