(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றிய இலங்கைக்கு இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப் ஆகியோரின் துல்லியமான பந்தவீச்சுகளும் அணித் தலைவர் ஷாய் ஹோப்பின் அபார துடுப்பாட்டமும் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 1 - 0 என முன்னிலை அடைந்துள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்கவும் அணித் தலைவர் குசல் மெண்டிஸும் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தபோதிலும் இலங்கையினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது.
அறிமுக வீரர் லசித் குரூஸ்புள்ளே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
இலங்கை துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் (51), குசல் மெண்டிஸ் (36), தசுன் ஷானக்க (22), பெத்தும் நிஸ்ஸன்க (18) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்தவீச்சில் ஜேசன் ஹோல்டர் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷமர் ஜோசப் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஷாய் ஹோப், ப்றெண்டன் கிங் ஆகிய இருவரும் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஷாய் ஹோப் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்றார்.
ப்றெண்டன் கிங் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: ஜேசன் ஹோல்டர்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM