வித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக எமது இணையத்தள செய்தியாளர் தெரிவித்தார்.

புங்குடுதீவு பாட சாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட் டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. 

யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து யாழ்.நீதிமன்ற கட்டித் தொகுதியை சூழவும், நீதிமன்றின் உள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 50 பொலிஸார் பாதுகாப்பு சேவைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.