புனித ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பித்து இப்ராஹிம் நபியின் தியாக வாழ்வை நினைவூட்டும் வகையில் விசேட பெருநாள் நிகழ்வொன்று கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின் மஞ்சந்தொடுவாய் DASE வளாகத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, சகோதரத்துவத்தையும் நட்புறவையும் மேம்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.
இதன்போது இப்ராஹீம் நபியின் வாழ்விலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ளக் கூடிய வகையில், அவர்களின் வரலாற்றை உணர்வுபூர்வமாக உணர்த்துவதற்காக தத்ரூபமான காணொளியொன்றும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வைச் சிறப்புற நடத்துவதற்கு ஊக்கமும் ஆதரவும் அளித்த ஸ்தாபகத் தலைவர் கலாநிதி அலவி ஷரீப்தீன், இந்நிகழ்வுக்குப் பங்களிப்புச் செய்த பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் ஏற்பாட்டில் உதவிய ஊழியர்களுக்கும் ஏற்பாட்டுக்குழு சார்பில் முன்னோடிகளின் பாடசாலை அதிபர் ஸன்ஸீர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM