இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுக்கு தெரிந்த வகையில் உழைத்து பொருள் ஈட்டி.. அதனூடாக தங்களுடைய வாழ்வை கட்டமைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் தேவை என்பது நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை பூர்த்தி செய்வதற்குரிய வாய்ப்புகளும்... வசதிகளும்.. கிட்டுவதில்லை.
அத்துடன் அதற்கான சூட்சமங்களை தெரிந்திருந்தாலும் ... அவர்களால் அதனை சாத்தியப்படுத்த இயலாத அளவிற்கு தொடர் தடைகளும், தொடர் தாமதங்களும் நீடித்துக் கொண்டே இருக்கும். இந்நிலையில் வாழ்க்கையின் ஒரே இடத்தில் தேக்கமடைந்து விவரிக்க இயலாத அல்லது புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு தடை மற்றும் தாமதங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்... அதனை அகற்றுவதற்குரிய எளிய வழிமுறையினை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எம்மில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள அரச மரத்தடி விநாயகரை பற்றி நன்கு அறிந்திருப்போம். சில ஊர்களில் சிவாலயங்களுக்கு முன்பும்... சில ஊர்களில் அம்மன் ஆலயங்களுக்கு முன்பும்... சில ஆலயங்களில் பாம்பு புற்றுக்கு அருகிலும்... சில ஊர்களில் காவல் தெய்வ ஆலய வளாகத்திலும் அரச மரத்தடி விநாயகர் வீற்றிருந்து, அருள்பாலிப்பதை கண்டிருப்போம். இந்த தருணத்தில் உங்களின் நடப்பு திசா நாதனை பொறுத்து ...அரச மரத்தடி விநாயகரை தெரிவு செய்து ,அங்கு வாழும் ஜீவராசிகளான எறும்புகளுக்கு வெல்லம் கலந்த மாவு உணவுகளை பசியாற வழங்கினால்.. உங்களுடைய தடைகள் அகற்றப்பட்டு, வெற்றிக்கான வழிவகை உண்டாகி, சாதனை படைப்பீர்கள்.
உதாரணத்திற்கு உங்களுக்கு சூரிய திசை நடந்தால்... ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரையில் சிவாலயங்களுக்கு முன்பாக உள்ள அரச மரத்தடி விநாயகருக்கு கோதுமையும், வெல்லமும் கலந்த மாவை அங்குள்ள எறும்புகளுக்கு பசியாற வழங்கிட வேண்டும். இதேபோல் உங்களுடைய நடப்பு திசைக்கு ஏற்ற வகையில் கிரகங்களின் பிரத்யேக உணவு பொருளையும், வெல்லத்தையும் கலந்து அங்கு வாழும் எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு பசியாற வழங்கி வந்தால்.. தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM