சொக்கர் மாஸ்டர்ஸ் கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏழாவது தடவையாக நடத்தப்படும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் ஓல்ட் பென்ஸ் கழகமும் குருநாகல் வெட்டரன்ஸ் கழகமும் விளையாட தகுதிபெற்றுள்ளன.
இந்த இறுதிப் போட்டி கொட்டாஞ்சேனை, புனித பெனடிக் மைதானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறும்.
கழகங்களுக்காகவும் நாட்டிற்காகவும் விளையாடிய ஓய்வு பெற்றுள்ள வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது நலன்புரி விடயங்களுக்கு உதவும் வகையிலும் சொக்கர் மாஸ்டர்ஸ் கால்பந்தாட்ட சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக அதன் ஸ்தாபகத் தலைவரும் தற்போதைய தலைவரும் முன்னாள் தேசிய வீரருமான திலக் பீரிஸ் தெரிவித்தார்.
ஓல்ட் பென்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் கழக மட்ட, தேசிய மட்ட வீரர்கள் பலர் துன்புறுவதைக் கண்ணுற்றதை அடுத்தே அவர்களது நலன்புரி விடயங்களைக் கருத்தில் கொண்டு சொக்கர் மாஸ்டர்ஸ் கால் பந்தாட்ட சங்கத்தை ஆரம்பித்ததாக அவர் கூறினார்.
இன்று தமது சங்கத்தில் 45 கழகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வும் 1600க்கும் மேற்பட்ட வீரர்கள் சிரத்தையுடன் போட்டிகளில் பங்குபற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM