சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவும் புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது!

Published By: Digital Desk 3

11 Jun, 2026 | 12:26 PM
image

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கனடா அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. 

கடந்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலியா கொண்டுவந்த சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் புதன்கிழமை 'பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டம்' என்ற இந்த புதிய சட்டமூலத்தை அந்நாட்டு பாராளுமன்றத்தில் சம்பித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கடுமையான சட்டத்தைப் போலல்லாமல், கனடாவின் புதிய சட்டத்தில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு விசேட விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளைக் குறைப்பதற்கான வலுவான கொள்கைகளைக் கொண்டுள்ளதை நிரூபித்தால், இந்தத் தடையிலிருந்து விலக்களிக்கப்பட முடியும்.

இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் கனடிய  டொலர்கள் அல்லது அவர்களின் உலகளாவிய மொத்த வருமானத்தில் 3 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

நிறுவனங்கள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக 'கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு' என்ற புதிய சுயாதீன ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

கனடாவில் கடந்த பெப்ரவரி மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய 18 வயது சந்தேக நபர், துப்பாக்கி வன்முறைகள் குறித்து பல மாதங்களுக்கு முன்பே செட்ஜிடிபி செயற்கை நுண்ணறிவுடன் கலந்துரையாடியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. 

இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதற்காக ஓப்ஏஐ நிறுவனம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதுடன், அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

இதன் காரணமாகவே, புதிய சட்டத்தில் ஏஐ சாட்போட்டுகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் இணையத்தில் "தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை"  கட்டுப்படுத்தும் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் சிறுவர்களை இணையத் தீமைகளிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ள நிலையில் கனடா இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

அவுஸ்திரேலியா 6 மாதங்களுக்கு முன்பே 16 வயதிற்குட்பட்டோருக்கான தடையைக் கொண்டுவந்தது. இருப்பினும் 70% சிறுவர்கள் இன்னும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகக் ஆய்வுகள் கூறுகின்றன.

கிரீஸ் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடை எதிர்வரும் ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறது.

பிரித்தானியா அடுத்த வாரம் 16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை அறிவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கனடாவின் இந்த புதிய சட்டம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் தணிக்கை முறையை அதிகரிக்கும் என சில மனித உரிமை மற்றும் சிவில் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07