16.5 மில்லியன் ரூபா நாற்காலி கொள்வனவு மோசடி : முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு ஷான் விஜயலாலுக்கு 12 ஆம் திகதிவரை விளக்கமறியல்

Published By: Vishnu

11 Jun, 2026 | 02:26 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்,செ.சுபதர்ஷனி)

தெற்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் புதன்கிழமை (10) பிற்பகல் கைது செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாகாணத்திலுள்ள தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்காக 16.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே முன்னாள் முதலமைச்சர் நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாது, தயாரிப்பு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட 16,361 நாற்காலிகளை தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததன் ஊடாக, அரசாங்கத்துக்கு இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர்களை கால்நடைகள் அழித்ததால் நேர்ந்த கொலை!...

2026-07-20 12:16:46
news-image

வெவ்வேறு இடங்களில் சோதனைகள்: 280 லீற்றருக்கும்...

2026-07-20 12:08:08
news-image

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2026-07-20 11:56:17
news-image

குருநாகல் - புத்தளம் வீதியில் பேருந்து...

2026-07-20 11:17:09
news-image

மொனராகலையில் பேருந்துடன் வேன் மோதி விபத்து:...

2026-07-20 10:48:26
news-image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044...

2026-07-20 10:57:02
news-image

திரவப் பாலுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள்:...

2026-07-20 10:43:33
news-image

சுற்றுலா வளர்ச்சியின் புதிய மையமாக உருவெடுக்கும்...

2026-07-20 10:04:10
news-image

தங்காலை - மாத்தறை வீதியில் சொகுசு...

2026-07-20 09:59:17
news-image

''வோல்பாக்கியா பக்றீரியா'' முறை மூலம் அடுத்த...

2026-07-20 09:24:47
news-image

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் வீதித் தகுதி பரிசோதனை:...

2026-07-20 09:20:53
news-image

நாட்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்...

2026-07-20 08:59:40