இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 400 கிலோ எடையுள்ள கடல் வெள்ளரிகள் இராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இவை, இராமேஸ்வரத்தின் திறப்பன்வலசை என்ற கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கடத்தல் முயற்சியில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வனத் துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் வெள்ளரியின் பெறுமதி சுமார் பன்னிரண்டு இலட்ச ரூபா என்று தெரியவந்துள்ளது.

அரிய வகை உயிரினமாக விளங்கும் கடல் வெள்ளரிகளை உற்பத்தி செய்வதும் அனுமதியின்றி விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.