பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்..?

10 Jun, 2026 | 04:42 PM
image

எம்மில் சிலருக்கு அவர்களுடைய ஜாதகத்தில் நவகிரகங்களில் சாயா கிரகங்கள் என குறிப்பிடப்படும் ராகு- கேது தவிர்த்து ஏனைய ஏழு கிரகங்கள்.. மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசி கட்டங்களில் எங்கேனும் பரிவர்த்தனை ஆகியிருந்தால்... அதனை பரிவர்த்தனை யோகம் என குறிப்பிடுவார்கள். சிலருக்கு இந்த யோகம் எப்போது செயல்படும்? என தெரிவதில்லை. இது தொடர்பான விளக்கத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பின்வரும் வகையில் விவரிக்கிறார்கள்.

உங்களது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சூரியன்- புதன்- செவ்வாய்- குரு- சுக்கிரன் -சனி- சந்திரன்+ ஆகிய ஏழு கிரகங்கள் ஜாதகத்தில் உள்ள பன்னிரண்டு ராசி கட்டங்களில் ஏதேனும் ஒரு வீட்டில் அமர்ந்திருக்கும். இந்நிலையில் சுக்கிரன் - குரு ஆகிய  இரண்டு சுப கிரகங்களும் அவர்களுக்குரிய வீடுகளில் இல்லாமல் ... பரிவர்த்தனை பெற்றிருந்தால் அவை பரிவர்த்தனை யோகம் என குறிப்பிடுவர். சுக்கிரனின் வீடு என குறிப்பிடப்படும் ரிஷபம் - துலாம் ஆகிய வீட்டில் குரு பகவான் இருந்தாலும் அல்லது குரு பகவானின் வீடு என குறிப்பிடப்படும் தனுசு மற்றும் மீன வீட்டில் சுக்கிரன் இருந்தாலும்.. இவை பரிவர்த்தனை பெற்றிருக்கிறது என பொருள் கொள்ள வேண்டும்.

இவை சுப பலன்களை அள்ளி வழங்கும் பரிவர்த்தனை என்றாலும்... ஜாதகருக்கு சுக்கிர தசை அல்லது குரு தசை நடக்கும் போது அல்லது சுக்கிர திசையில் குரு புத்தி அல்லது குரு தசையில் சுக்கிர புத்தி நடக்கும் போது பரிவர்த்தனை யோகம் விரைவாக செயல்படும். இத்தகைய தருணத்தில் ஜாதகரின் வளர்ச்சி என்பது மும்மடங்கு வேகத்தில் உண்டாகும். 

எம்மில் சிலர், ''எம்முடைய ஜாதகத்தில் கிரகங்களின் பரிவர்த்தனை உள்ளது. ஆனால் சிக்கல் மேல் சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கிறேன்'' என யதார்த்த நிலையை விவரித்தால்.. அவர்களுக்கான தீர்வையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்குகிறார்கள். இவர்கள் பரிவர்த்தனை யோகம் இருக்கும் பட்சத்தில் 'இடமாற்றம்: செய்தால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.  இடமாற்றத்திற்கு அவர்கள் மனதளவில் தயாராகி அதனை சாத்தியப்படுத்தினால்... சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

அதே தருணத்தில் குரு பகவான் மற்றும் சுக்கிர பகவானுக்குரிய ஆலயங்களுக்கு சென்று முறையாக வழிபடும்போது மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

வேறு சிலருக்கு எந்த கிரகங்கள் பரிவர்த்தனை ஆகியிருக்கிறதோ..! அந்த கிரகங்களுக்குரிய ஆலயத்திற்கு சென்று முறையாக வழிபடும்போது.. பரிவர்த்தனை யோகத்தின் பலன் மும்மடங்கு கூடுதலாக கிட்டும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29