யாழ்ப்பாணம், தென்மராட்சி கெருடாவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது துரைராஜா ரஜீவ் என்ற இளம்குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார்.

கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் மீது இரு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் துரத்தி துரத்தி வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.