இன்று (10) காலையில் காலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்துடன் 'பாரதிராஜாவின் உடலுக்கு முழு அளவில் அரசு மரியாதை செலுத்தப்படும்' என்றார்.
84 வயதாகும் இயக்குநர் பாரதிராஜா முதுமையின் காரணமாக உடல் நல குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டிற்கு இன்று காலை தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் மறைந்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிற்கு ராஜாவின் பூத உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மேலும் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கவிப்பேரரசு வைரமுத்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நடிகை சுகாசினி சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் வருகை தந்து மறைந்த பாரதிராஜாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியின் தலைவர்களும் மறைந்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிற்கு சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM