தமிழ் திரையுலகின் போக்கை மாற்றி அமைத்து தனித்தடம் உருவாக்கிய 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா உடல் நல குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
84 வயதாகும் இயக்குநர் பாரதிராஜா அண்மைக்காலமாக வயது மூப்பின் காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார்.
1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா.. தொடர்ந்து கிராமிய பின்னணியில் பல வெற்றி படங்களை உருவாக்கி, தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான அடையாளத்தை செதுக்கினார்.
'பதினாறு வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'முதல் மரியாதை', 'கருத்தம்மா', 'கிழக்குச் சீமையிலே' ஏராளமான படைப்புகள் அவருடைய இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களாகும். இவருடைய கலை சேவையை பாராட்டி இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது- 2004 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே கடந்த ஆண்டு அவரது ஒரே மகனான மனோஜ் உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட மன அதிர்ச்சியில் இருந்து மீளாத பாரதிராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தாலும்.. முதுமை காலத்தில் மனைவியும் இல்லாமல்.. மகனும் இல்லாமல்.. அவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத துயரிலிருந்து மீள முடியாமல் உயிரிழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM