இன்றைய சூழலில் பாடசாலைக்கு செல்லும் பாலகர்கள் முதல் வீட்டில் இருக்கும் முதியவர்கள் வரை இணைய பயன்பாடு மற்றும் கணினி பாவனை அதிகரித்து வருகிறது. அதே தருணத்தில் இதற்காக பரிந்துரைக்கப்பட்ட உடல் தோற்றத்தில் இதனை இயக்காமல்... எம்முடைய சௌகரியமான நிலைக்கு ஏற்ப கணினி பயன்பாட்டை தொடர்வதால்.. முழங்கைகளில் விவரிக்க இயலாத பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது முழுமையான நிவாரண சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்மில் சிலர் கணினி பயன்பாட்டின் போது பணியின் தீவிரம் காரணமாக முறையற்ற முறையில் அமர்ந்து நீண்ட நேரம் பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் சுண்டு விரலில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு ஏற்படுகிறது. பிறகு முழங்கையின் உட்பகுதியில் வலி ஏற்பட்டு, அவை கை முழுவதும் பரவுகிறது. இத்தகைய அறிகுறி ஏற்பட்ட பிறகு பொருட்களை உறுதியாக கைப்பற்றுவதில் சிரமம் ஏற்படும். சிலருக்கு கைகளில் உள்ள தசைகளும் பலவீனமடையும்.
எம்முடைய முழங்கையை கணினியை பாவிக்கும்போது அதிக நேரம் மடக்கி வைத்திருப்பது அல்லது ஒரே நிலையில் தவறாக வைத்திருப்பது... நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது முழங்கையை தவறாக பாவிப்பது,... இப்படி பல்வேறு காரணங்களால் இத்தகைய க்யூபிடல் டன்னல் சிண்ட்ரோம் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் முழங்கைப் பகுதியில் நரம்பியல் சேத பாதிப்பை ஏற்படுத்தும்.
இத்தகைய நிலையில் உங்களுடைய முழங்கையின் உள்பகுதியில் உள்ள எல்நார் எனும் நரம்பு சேதமடைய தொடங்குகிறது. இத்தகைய அறிகுறிகளுடனும்... முழங்கை வலியுடனும்... சுண்டுவிரல் உணர்வின்மை நிலையிலும்... வருபவர்களை வைத்தியர்கள் நரம்பியல் செயல்பாட்டுத் திறன் குறித்த பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் வீரியத்தை துல்லியமாக அவதானிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிக்கிறார்கள். அதனுடன் முழங்கையின் இயல்பு நிலையை மீட்க பிரத்யேக உறையை அணியுமாறும் வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். அத்துடன் முழங்கையில் உள்ள சேதமடைந்த நரம்புகள் மீண்டும் இயல்பு நிலையில் செயல்படுவதற்கான பிரத்யேக இயன்முறை பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதனை செய்த பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை மேற்கொண்டால்... மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
வைத்தியர் வேணி தொகுப்பு அனுஷா
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM