கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் போர்ட் (SMART BOARD) வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,கொழும்புக்கிளை பழைய மாணவர் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கொழும்பு கதிரேசன் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கிளைச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் திறன் பலகை நன்கொடையாளர் சிறப்பு விருந்தினர் திரு. சதாசிவம் பிள்ளை சுந்தரலிங்கம் (Neon) கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போர்ட்டின் அறிமுகம், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதுடன், ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளையும் இலகுவாக்கும் எனக் குறிப்பிடப்பட்டது.
மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்காக இவ்வாறான தொழில்நுட்ப வசதிகளை வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இப்போது நவீன தொழில்நுட்பத்தின் ஊடான ஸ்மார்ட் டிவி, கணனி அறை , ஸ்மார்ட் போர்ட் என ஆரம்ப பிரிவு மாணவர்களுக்காக இப்பாடசாலைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு உழைத்த அதிபருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர்.
“நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியே மாணவர்களின் வெற்றிப் பாதையை உருவாக்கும்.”


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM