இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் சுப்பர் இருபதுக்கு 20 மாகாணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் கொழும்பு கொமாண்டர்ஸ் அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தில்ஷான் தலைமையிலான அம்பாந்தோட்டை ட்ரூபர்ஸ் அணி வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய திக்வெல அதிகூடிய ஓட்டமாக 51 ஓட்டங்களைப் பெற்றார்.
163 என்ற வெற்றி இலக்கை விரட்டிய அம்பாந்தோட்டை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. இதில் பிரசன்ன(40)இ வீரக்கொடி(36)இ பிரயஞ்சன் ஆட்டமிழக்காமல் 41 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அணித் தலைவர் தில்ஷான் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மற்றொரு போட்டியில் குருணாகலை வோரியர்ஸ் மற்றும் காலி கார்டியன்ஸ் அணிகள் மோதின. இதில் மிலந்த மற்றும் ஜயசுந்தரவின் அதிரடி ஆட்டத்தால் காலி அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் ஆடிய குருணாகலை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு ஆடிய காலி அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இதில் 43 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசிய மிலிந்த மற்றும் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்ற ஜயசுந்தர காலி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM