தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்படும் தென்னருவி வர்த்தகக் கண்காட்சியும் தொழிற் சந்தையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) , சனிக்கிழமை (13) ஆகிய திகதிகளில் யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
தென்மராட்சியிலுள்ள முயற்சியாண்மைகளை இனங்கண்டு தொழில்முயற்சியாளர்களை அறிமுகப்படுத்தும் வகையிலும், மாணவர்கள் மத்தியில் முயற்சியாண்மைச் சிந்தனையையும் பாடஞ்சார் அறிவையும் வளர்க்கும் வகையிலும், தொழில் வழிகாட்டலை வழங்கும் வகையிலும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) காலை 9 மணிக்கு தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜனது தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வட மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் பிரதம விருந்தினராகவும், வட மாகாண கல்வித் திணைக்கள வர்த்தக பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.சுபாகரன் சிறப்பு விருந்தினராகவும், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத் தலைவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமான அ.கயிலாயப்பிள்ளை கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கண்காட்சியில் வலய வர்த்தகப் பிரிவினரால் முயற்சியாண்மையாளர்களின் காட்சிக்கூடங்களும், வணிக முகாமைத்துவம், கணக்கீடுசார் நிறுவனங்களின் தொழில் வழிகாட்டல் அலகுகளின் கூடங்களும் காட்சிப்படுத்தப்படுவதோடு, வலய தொழில் வழிகாட்டல் அலகினால் தொழிற்சந்தைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தென்மராட்சி வலயத்தில் முன்னர் நடத்தப்பட்டு பிரபலமாகப் பேசப்பட்ட தென்னருவி கண்காட்சி ஒன்பது ஆண்டுகளின் பின்னர் இவ்வாண்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM