நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட கலந்துரையாடல்!

Published By: Digital Desk 1

09 Jun, 2026 | 08:37 AM
image

கதிரேசன் மத்திய கல்லூரி, கதிரேசன் மாதிரி பாடசாலை, மற்றும் கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி அதிபர்களுடனான விசேட சந்திப்பும், கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் பாடசாலை ஆசிரியர்களுடன் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், தாய் சங்க உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு கிளைச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஒழுக்க வளர்ச்சி, பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து விரிவாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும், மூன்று கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த கல்விச் சாதனைகளை நோக்கிச் செல்லும் வழிமுறைகள் தொடர்பாக பயனுள்ள ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

கதிரேசன் கல்விக் குடும்பத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அனைவரும் இணைந்து செயற்பட உறுதியளித்த இக்கலந்துரையாடல் சிறப்பாக நிறைவுபெற்றது.

“கல்வியே சிறந்த செல்வம்” என்ற உயரிய நோக்குடன் கதிரேசன் கல்விக் குடும்பத்தின் முன்னேற்றப் பயணம் தொடரட்டும். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை...

2026-07-20 15:28:33
news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07