(நெவில் அன்தனி)
நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் மூன்று தினங்களுக்குள் திங்கட்கிழமை (8) நிறைவடைந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது.
![]()
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நியூ சண்டிகார் விளையாட்டரங்கில் அரங்கேற்றப்பட்ட முதலாவது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த வெற்றியானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ஈட்டிய மிகப்பெரிய வெற்றியாக பதிவானது.
இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு ஓர் இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டிருந்ததே இந்தியாவின் முந்தைய மிகப் பெரிய டெஸ்ட் வெற்றியாக இருந்தது.

கே.எல். ராகுல், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகியோர் குவித்த சதங்கள், சாய் சுதர்சன், ரிஷாப் பான்ட், வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள், அறிமுக வீரர் மானவ் சுதார் பதிவுசெய்த 6 விக்கெட் குவியல் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா இரண்டாம் நாள் தேநீர் இடைவெளைக்கு சற்று முன்னர் வரை துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 584 ஓட்டங்களைக் குவித்து துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நான்கு ஆட்ட நேர பகுதிகளுக்குள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
முதல் இன்னிங்ஸில் 152 ஒட்டங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தான், பலோ ஒன்னில் 2ஆவது இன்னிங்ஸில் 112 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: 564 - 8 விக். டிக்ளயார்ட் (ஷுப்மான் கில் 126, கே.எல். ராகுல் 100, சாய் சுதர்சன் 81, ரிஷாப் பான்ட் 81, வொஷிங்டன் சுந்தர் 52, மொஹம்மத் சலீம் 140 - 6 விக்.)
ஆப்கானிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 152 (ரஹ்மத் ஷா 60, ஹஸ்மத்துல்லா ஷஹிதி 20, மானவ் சுதார் 22 - 10 - 33 - 6 விக்., ப்ராசித் கிரிஷ்ணா 37 - 3 விக்.)
ஆப்கானிஸ்தான் ஃபளோ ஒன் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 112 (சிதிக்உல்லா அத்தல் 42, ரஹ்மானுல்லா குர்பாஸ் 24, வொஷிங்டன் சுந்தர் 36 - 4 விக்., குல்தீப் யாதவ் 30 - 3 விக்.)
ஆட்டநாயகன்: மானவ் சுதார்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM