மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

08 Jun, 2026 | 06:31 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சுகாதார அமைச்சின் அறிவித்தலுக்கமைய  இன்று திங்கட்கிழமை (8) நாடளாவிய ரீதியில் டெங்கு அதி உயர் அபாயமிக்க பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைப் பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை கொழும்பு மாநகர சபை வளாகத்தில் கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலீ பல்தஸார், மாநகர சபை பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே. ஸ்ரீபிரதாபன் மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர ஆகியோர் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தஸார், தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வேலைத்திட்டத்துக்கு முப்படையினர், பொலிஸார், அரச நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டினார். அத்துடன், கொழும்பு நகரிலுள்ள 150 பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் இடம்பெறும் இடங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர, 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 37 ஆயிரத்துக்கும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்தவகையில் கடந்த  வருடத்த்துடன் ஒப்பிடுகையில்  நோயாளர்களின் எண்ணிக்கை  10 ஆயிரத்தால் அதிகரித்துள்ளது.  அத்தோடு இந்நோயாளர்களில் 50  சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கொழும்பு மாவட்டத்தில் 22 சதவீதமும், கம்பஹாவில் 17 சதவீதமும், களுத்துறையில் 6 சதவீதம்  மற்றும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில்  5.1 சதவீதம்  என்ற அடிப்படையில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. மேலும், சோதனைகளின் போது பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களிலேயே அதிகளவில் நுளம்பு பெருகுவதாக கண்டறியப்பட்டுள்ளன.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இவ்விசேட வேலைத்திட்டத்தின் போது வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மதஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் கைவிடப்பட்ட  காணிகள்  என்பன சோதனையிடப்படவுள்ளன. நுளம்பு பெருகுவதுக்கு ஏற்றவகையில் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன. அத்துடன், அதி அபாய வலயங்களில் புகை விசிறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வேலைத்திட்டத்தின் தினசரி முன்னேற்றம் குறித்து சுகாதார அமைச்சின் இடர் முகாமைத்துவப் பிரிவில் மீளாய்வு செய்யப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34