'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'குமார சம்பவம்' படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் குமரன் தியாகராஜன் கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
'இறுதிப்பக்கம்' படத்தை இயக்கிய இயக்குநர் மனோ. வீ. கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் குமரன் தியாகராஜன், ஸ்மீகா , ராஜேஷ் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை இன்சோம்னியாக்'ஸ் ட்ரீம் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிலம்பரசன்- சாண்டில்யன்- சசிகுமார்- செல்வன்- ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எனும் சின்ன திரை தொடர் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமாகி உள்ள நடிகர் குமரன் தியாகராஜன்- கதையின் நாயகனாக நடித்திருப்பதால்... இப்படத்திற்கான குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM