நடிகர் சந்தோஷ் நடிக்கும் 'டபுள் ஓக்குபன்சி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

08 Jun, 2026 | 05:54 PM
image

'பிக் பொஸ்' புகழ் சந்தோஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'டபுள் ஓக்குபன்சி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டபுள் ஓக்குபன்சி' திரைப்படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ சி எஸ் அருண்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த முன்னோட்டத்தில் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை ஆணாகவும்... மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பெண்ணாகவும்... மாறி மாறி இருக்கும் ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை மையப்படுத்தி இப்படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாகவும்... சுவாரசியமாகவும்.. அமைக்கப்பட்டிருப்பதால்.. படத்தைப் பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:27:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54