தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகர் சேத்தன் சீனு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வள்ளுவன் 'எனும் திரைப்படத்தில் இடம் பிடித்த 'சின்னஞ்சிறு' எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாகி வரும் 'வள்ளுவன்' திரைப்படத்தில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மறைந்த நடிகர் மனோபாலா, சாய் தீனா, பிரேம்குமார், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷைல் குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார்.
விரைவில் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு கூட்டுல சாமியா காக்குற..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் டொக்டர் மேரி சுரேஷ் எழுத ,பின்னணி பாடகி சுவஸ்திகா சுவாமிநாதன் பாடியிருக்கிறார். குடும்ப உறவுகளையும் , குடும்ப அமைப்பின் மேன்மையையும் மெல்லிசை உடன் விவரிக்கும் இந்த பாடல் இசை ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM