'கேன்ஸ்' சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற 'பாலன்' திரைப்படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் இதனை முன்னணி நட்சத்திர நடிகரான 'கருப்பு' சூர்யா வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாலன்' திரைப்படத்தில் ஆதிசேஷன், ஃபர்சானா பலத்திங்கல், முகமத் ஜினான், டோலி ஜூன், ஜீன் பால் லால், கிரிஷ் ஏ டி , பீனா அண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சைஜு காலித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுசின் ஷியாம் இசையமைத்திருக்கிறார்.
சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியான் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வெங்கட் கே. நாராயணா மற்றும் சைலஜா தேசாய் ஃபென் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'பாலன்' திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்... படமாளிகையில் நல்லதொரு திரையனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM