இரட்டையர் - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஏசியா ஐகானிக் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : அபிநயா, அனுமிதா, அனுஷிதா, சுப்பிரமணிய சிவா மற்றும் பலர்.
இயக்கம் : ஜெகதீஷ் தம்பையா.எஸ்
மதிப்பீடு : 2 /5
குறைந்த முதலீட்டில் தயாராகும் பல திரைப்படங்களுக்கு திரையுலக வணிகர்கள் ஆதரவு தருவதில்லை என்றாலும்... ரசிகர்கள் அதற்கு பேராதரவு வழங்கி பெரிய வெற்றியை கொடுப்பதுடன்.. அந்த குழுவினருக்கு பாரிய வரவேற்பையும் வழங்குவர். இது வரலாறு. இத்தகைய வரலாற்றின் மீது நம்பிக்கையை கொண்ட குழுவினரிடமிருந்து 'இரட்டையர்' எனும் படைப்பு வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
மலைவாசஸ்தலத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு அபிஷேக் - அமிர்தா தம்பதிகள் தங்களுடைய அனுமிதா - அனுஷிதா எனும் இரட்டை பிள்ளைகளுடன் சொகுசு வாகனத்தில் பயணிக்கிறார்கள். பயணத்தின் போது சட்டத்தரணி ராஜரத்தினம் ( சுப்பிரமணிய சிவா) என்பவர் போன் மூலமாக காணி விற்பனை குறித்து பேச.. 'எத்தகைய நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் வீட்டை விற்கப் போவதில்லை' என உறுதியாக அபிஷேக் தெரிவிக்கிறார். இந்தத் தருணத்தில் எதிர்பாராத விதமாக விபத்து நடக்கிறது. அந்த விபத்தில் அபிஷேக் இறந்து விடுகிறார். அமிர்தா கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார். அனுஷிதாவும் அனுமிதாவும் காயங்களுடன் தப்பிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு அமிர்தாவின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை இரட்டையர்கள் உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில் எம்முடன் இருப்பது அன்பும் பாசமும் காட்டிய அம்மா தானா..? என்ற ஐயமும் ஏற்படுகிறது. இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அந்த இரட்டையர்கள் தங்கள் அறிவுக்கு எட்டிய வகையில் அம்மாவை பரிசோதிக்கிறார்கள். இந்த பரிசோதனையில் தாய் அமிர்தா தோல்வி அடையவே... தங்களுடன் இருப்பது தங்களின் உண்மையான தாய் அல்ல என்று எண்ணும் அனுமிதாவும் அனுஷிதாவும் உண்மையை அறிந்து கொள்வதற்காக பல முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? உண்மையில் நடந்தது என்ன? என்பதை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
கதாபாத்திரங்கள் மலைபாதையில் பயணிக்கும் காட்சிகளின் நீளம் அதிகம் என்று எண்ணி சோர்வடையும் தருணத்தில்.. விபத்தினை ஏற்படுத்தி, அதன் மூலமாக கதையில் சுவாரசியமான திருப்பத்தை உண்டாக்கி.. ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள் படக் குழுவினர். இரட்டையர்களான அனுஷிதா - அனுமிதா ஆகிய குழந்தை நட்சத்திரங்களுக்கான காட்சிகள் இயல்பாக அமைத்திருப்பதையும் பாராட்டலாம். ஆனால் டாம் அண்ட் ஜெர்ரி எனும் கேலிச்சித்திரத்தை விருப்பத்துடன் பார்த்து ரசிக்கும் பிள்ளைகள்... அம்மா மீது சந்தேகம் கொள்ளும் காட்சிகளும்.. அதற்கான திரைக்கதையும்... பல இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. இருப்பினும் உச்சகட்ட காட்சியில் இயக்குநர் சொல்லும் டிவிஸ்ட் ...ரசிக்க வைக்கிறது.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அபிநயா வழக்கம்போல் உணர்வுபூர்வமாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.
அனுமிதா - அனுஷிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிள்ளைகளும் .. இயக்குநர் சொன்னதை செய்து ரசிக்க வைக்கிறார்கள்.
ஜி கே வியின் பின்னணி இசை - முஹம்மது அமீனின் ஒளிப்பதிவு - படத்திற்கு பக்க பலம்.
2021 ஆம் ஆண்டில் மறைந்த நடிகர் வெங்கட் சுபா இப்படத்தில் நடித்திருப்பதால்.. இப்படம் உருவாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்ற நிலையிலும்.. குறைந்த முதலீட்டில் ஓரளவு ரசிக்க கூடிய வகையில் இந்த படம் இருப்பதை வரவேற்கலாம்.
இரட்டையர் - ட்வின் டவர்ஸ்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM