திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய நிதியம் அறிக்கை மிகப்பெரியது - சம்பிக்க ரணவக்க

08 Jun, 2026 | 04:21 PM
image

கடந்த காலத்தில், ஹெக்கர்கள் திறைசேரியிலிருந்து 2.2 மில்லியன் டொலரைத் திருடிவிட்டதாகக் கூறி   பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. ஆனால். சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, அதைவிட மிகப் பெரியதாக உள்ளது  என முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கிறார். 

கண்டி, டெவோன் ஹோட்டலில்  நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் செயற்குழுக் கூட்டத்தில்  உரையாற்றிய போது அவர் மேற்கண்ட  தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,

2025-ல் அரசாங்கத்திடம் இருந்த பணத்தில் 808 மில்லியன் டொலருக்கு என்ன  நடந்தது என்பது தொடர்பான சரியான விபரங்கள் இல்லை என  சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட  அந்த அறிக்கையில் மேற்படி 808 மில்லியன் டொலர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் நிதி அமைச்சர்  இந்தப் பணம் பற்றித் தௌிவுபடுத்தவேண்டும். இந்த மாபெரும் தொகைக்கு என்ன ஆனது? அது எங்கு  இருக்கிறது? இது பற்றி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு  சொல்ல வேண்டும்.

கடந்த காலத்தில், ஹெக்கர்கள் திறைசேரியிலிருந்து 2.2 மில்லியன் டாலரைத் திருடிவிட்டதாகக் கூறி   பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. ஆனால். சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, அதைவிட மிகப் பெரியதாக உள்ளது.  பில்லியன் கணக்கான டாலர்கள் வெளியேறுகின்றன. அரசாங்கத்தைச் சுற்றியுள்ள சில திருடர்கள்  இதற்கு காரணமாக இருக்கலாம்.

 இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தவறாகப் பயன்படுத்தப்படுகிது,  சட்டம் இரண்டு விதமாக  செயல்படுவாதாகக் கூறப்படுகிறது. ஆதரவாளர்களுக்கு ஒரு விதமாகவும்  எதிர்ப்பவர்களுக்கு மற்றொரு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்களைப் பற்றி  இன்னும் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை, உலகிலேயே அதிக எரிபொருள் விலையை இலங்கைதான் செலுத்துகிறது என்று சர்வதேச வங்கியான HSBC கூறியுள்ளது.

இந்த அரசாங்கம் ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார்  98 ரூபாவை  முறையற்ற வகையில் ஈட்டுகிறது என்ற விடயம் பற்றி விசாரிக்க வேண்டும். இது குறித்து நாங்கள் இலஞ்ச ஆணைக்குழுவிடம் புகார் அளித்தோம், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

தரம் குறைந்த 30 கப்பல் நிலக்கரியைக் கொண்டுவந்து செய்த மாபெரும் மோசடியால், இந்த நாட்டு மக்கள் இன்று ஒரு பெரிய எரிபொருள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அந்த நிலக்கரி திட்டமிட்டபடி மின்சாரத்தை உற்பத்தி செய்யாததால், தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் லிட்டர் டீசல் வீணாக எரிக்கப்பட வேண்டியுள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08