நடிகர் விதார்த் நடிப்பில் தயாராகி வரும் 'மூன்றாம் கண்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் அஜீஷ் இசையில் உருவான பாடலும், அதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூன்றாம் கண்' திரைப்படத்தில் விதார்த் ,கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரி குன், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான் விஜய், ராதா ,கே பி வை சரத் ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு அஜீஷ் மற்றும் ஆர்.எஸ். ராஜ் பிரதாப் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. சசிகுமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 12-ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கில் புதிய பாடல் ஒன்றை உருவாக்கி அதற்கென பிரத்யேக நடன அசைவுகளுடன் கூடிய ப்ரோமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'விழிகளில் தோன்றியே ஒளியினில் மறைகிறாள்.. இமைகளில் வருடியை இதயத்தில் நுழைகிறாள்..' எனத் தொடங்கும் இந்த புரோமோ பாடலை பாடலாசிரியர் சகோ கணேசன் எழுத பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான அஜீஷ் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM