நடிகர் சசிகுமார் வெளியிட்ட 'பாரிஸ் கஃபே' படத்தின் டீசர்

08 Jun, 2026 | 04:01 PM
image

'ஜோக்கர் 'படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி, ரசிகர்களது கவனத்தை தனது பக்கம் திரும்பிய நடிகர் குரு சோமசுந்தரம் கதையின் மைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் 'பாரிஸ் கஃபே' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சசிகுமார் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சரஜ் சீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாரிஸ் கஃபே' திரைப்படத்தில் குரு சோமசுந்தரம்,  அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா, சாய் விக்கி, நயனா சாய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் .ஜி. சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். எமோஷனல் ரொமான்டிக் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தண்டர் மீடியா -  எல் வி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கண்மணி ரங்கநாதன் மற்றும் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில், 'பாரிஸ் கஃபே' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மத்திம வயதில் உள்ள ஆணும், பெண்ணும் இளமை கடந்த பிறகு சந்தித்து உணர்வுபூர்வமாக காதலிக்கும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51