சாதனை படைத்து வரும் நடிகர் சனத் நடிக்கும் 'ஹார்ட்டின்' படத்தின் புதிய பாடல்

08 Jun, 2026 | 03:56 PM
image

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சனத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஹார்ட்டின்' படத்தில் இடம்பெற்ற 'ஒரு நொடி..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' திரைப்படத்தில் சனத், மடோனா செபஸ்டியன், ரி. இமையா, 'வாஸ் அப் ' மணி, டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

முகேஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒரு நொடி முடியும் முன் தொலைகிறேன் என் காதலே..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜா எழுத ,பின்னணி பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் பாடியிருக்கிறார்.

ஒரு பெண்ணை பார்த்ததும் முதன்முதலாக ஆணுக்குள் எழும் காதல் உணர்வை மெல்லிசையுடன் விவரிக்கும் இந்த பாடல்.. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51