தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஹிர்து ஹாரூன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டெக்சாஸ் டைகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் செல்வா கே. திருமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டெக்ஸாஸ் டைகர்' திரைப்படத்தில் ஹிர்து ஹாரூன், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி , அந்தோணி தாசன், சாஸ்னா நமிதாஸ், ரமேஷ் திலக், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்திருக்கிறார்.
ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி குமார் - பார்த்திபன் குமார்- செல்வா குமார் திருமாறன்- சுஜித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என்றும், இப்படத்தின் ஓடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது என்பதையும், விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM